24xnews தமிழ்

உண்மை! நேர்மை! நடுநிலைத் தன்மை!

24xnews தமிழ்

Latest Post

இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளான சுமார் 19 பலஸ்தீன போராளிகளுக்கு UAE அனுசரணையில் இன்று திருமண நிகழ்வு இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவை!

குவைத் நாட்டில் கணவனின் கள்ளத்தொடர்பை மனைவியிடம் போட்டுக்கொடுத்த கிளி!(2016-10-26) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

எங்கள் மண்மீது 1000 செல் விழுந்தாலும்;
எங்கள் மனம்கொண்ட மணவாழ்வில் என்றென்றும்
செல்'வம் கொழித்து கொண்டே இருக்கும்!!

தகவல்: சலீம் சர்ஜுன் 

சிரியாவில் நடந்த வான் வழி தாக்குதலில் பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.(2016-10-26) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement
Advertisement

வடக்கு சிரியாவில் போராளிகளின் பிடியில் உள்ள ஒரு தீவிரகிராமத்தில் நடந்த பலமான வான் வழி தாக்குதல்களால் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வான் வழிதாக்குதல் நடத்தப்பட்டதில் சேதமடைந்த கட்டடங்களில் ஒரு பள்ளிக்கூடமும் இடம்பெற்றுள்ளது. இதில் இருந்த பல குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து சிரியாவின் அரசுத் தொலைக்காட்சி குறிப்பிடுகையில்

Advertisement


இந்த தாக்குதல் குறித்து சிரியாவின் அரசுத் தொலைக்காட்சி குறிப்பிடுகையில், தீவிரவாதிகளின் நிலைகள் குறி வைத்து தாக்கப்பட்ட போது அவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இட்லிப் மாகாணத்தில் அமைந்துள்ள ஹாஸ் என்ற இந்த கிராமம், சிரியாவின் அரசுக்கு எதிராக போராடும் போராளிகளின் கோட்டையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

எதிரிகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்கும் அல்லது வேட்டையாடுவதற்கும் ஆக்ரோஷமான உணர்வுகளை மிருகங்கள் வெளிப்படுத்தும். அதுபோலத்தான் மனித குலமும் இப்போது மாறிவிட்டது.

எதிரிகளை மிரட்டுவதற்காகவும், தற்காத்துக் கொள்வதற்கும் மனித குலத்தை கொத்தாக மடியச் செய்யும் கொடிய ஆயுதங்களை தயாரிக்கும் பணிகளில் எல்லா நாடுகளுமே ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், ஒரு தேசத்தையே ஒரு நொடியில் அழித்துவிடக்கூடிய கொடிய அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை ஒன்றின் விபரங்களை ரஷ்யா வெளியிட்டிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளை மிரட்டும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த ஏவுகணை பற்றிய செய்திதான் சர்வதேச மீடியாக்களின் பரபரப்பான விஷயமாக உள்ளது.

சிரியாவில் நடந்த வான் வழி தாக்குதலில் பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.(2016-10-26) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆர்எஸ்-28 சர்மத் ஏவுகணை என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த ஏவுகணையானது சதன்-2 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. எஸ்எஸ்-18 என்ற ஏவுகணைக்கு மாற்றாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்ப்பட இருக்கிறது.

ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு எதிரி நாட்டு இலக்கை மிக துல்லியமாக தகர்த்துவிடும் வல்லமை கொண்ட அணு ஆயுத ஏவுகணை இது. வினாடிக்கு 7 கிமீ வேகத்தில் இந்த ஏவுகணையானது பயணிக்கும்.

இந்த ஏவுகணையானது 100 டன் எடை கொண்டதாக இருக்கிறது. இந்த ஏவுகணையானது 10 டன் வரை வெடிப்பொருட்களை சுமந்து செல்லும் வல்லமை படைத்தது. அணு ஆயுதம் இல்லாமல் சாதாரண வெடிப்பொருட்களை வைத்தும் ஏவ முடியும்.

திரவ எரிபொருளில் இயங்கும்....

குவைத் நாட்டில் கணவனின் கள்ளத்தொடர்பை மனைவியிடம் போட்டுக்கொடுத்த கிளி!(2016-10-26) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


திரவ எரிபொருளில் இயங்கும் ராக்கெட் பொறியில் செல்லும். இதன் முதல் நிலை எஞ்சின் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. மேக் 20 என்ற வேகத்தில் செல்லும். அதாவது மணிக்கு 24,500 கிமீ வேகத்தில் பறக்கும்.

சென்சார்களின் உதவியுடன் சுயமாகவே வழித்தடத்தை நிர்ணயித்து செல்லும் ஆற்றல் பெற்றிருக்கிறது. மேலும், மண்ணில் புதைக்கப்பட்ட உருளை அமைப்பிலான ஏவு தளத்திலிருந்து இதனை ஏவ முடியும். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எந்நேரமும் தயார் நிலையில் வைத்து, ஏவுவதற்கான இந்த ஏவுதளமானது சிலோ என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஏவுகணையானது 100 டன் எடை கொண்டதாக இருக்கிறது. இந்த ஏவுகணையானது 10 டன் வரை வெடிப்பொருட்களை சுமந்து செல்லும் வல்லமை படைத்தது. அணு ஆயுதம் இல்லாமல் சாதாரண வெடிப்பொருட்களை வைத்தும் ஏவ முடியும்.

ரேடார் சாதனங்களின் கண்களில் சிக்காமல் அதிகபட்சமாக 10,000 கிமீ தூரம் வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டது. ரஷ்யாவிலிருந்து 2,500 கிமீ தொலைவில் இருக்கும் லண்டன் மாநகரம் மற்றும் 7,580 கிமீ தொலைவில் இருக்கும் வாஷிங்டன் நகரங்களையும் குறி வைத்து நிலைநிறுத்த முடியுமாம்.

சிரியா போர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையில் பனிப்போர் நடந்து வரும் நிலையில், இந்த அணு ஆயுத ஏவுகணை மூலமாக ரஷ்யா மறைமுக எச்சரிக்கை விடுப்பதாகவே கருதப்படுகிறது.

சவுதி இன்னும் 3 ஆண்டுகளில் திவாலாகும்: அமைச்சர்கள் எச்சரிக்கை!(2016-10-26) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


பேஸ்புக்கில் எங்களது செய்திகளை முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, இதுவரை 24xnews.com தமிழ் பக்கத்தை லைக் செய்யாதவர்கள், கிழே உள்ள பொத்தானை அழுத்தி FB பக்கத்தை மறக்காமல் லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
Like

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

10 டெஸ்ட் தொடர்களை வென்று அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற ஆசிய கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்.

அபுதாபியில் நேற்று மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியதன் மூலம் மிஸ்பா இந்த சாதனையை நிகழ்த்தினார். சவுரவ் கங்குலி, தோனி ஆகியோர் 9 டெஸ்ட் தொடர்களை வெல்ல, ஜாவேத் மியாண்டட், ரணதுங்கா 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளனர்.

அபுதாபியில் பாகிஸ்தான் 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடியதில் 5-0 என்று முன்னிலை வகிக்கிறது. துபாயில் பாகிஸ்தான் வெற்றி விகிதம் 6-2, ஷார்ஜாவில் 4-3 என்பது குறிப்பிடத்தக்கது..

10,000 கி.மீ தூரம்  சென்று நொடி பொழுதில் அமெரிக்கா ஐரோப்பாவை தாக்கும் ஏவுகணையை வெளியிட்ட ரஷ்யா(2016-10-26) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


யாசிர் ஷா 112 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஜார்ஜ் லோமான், சிட்னி பார்ன்ஸ் ஆகியோருடன் இணைந்துள்ளார். அதாவது முதல் 18 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் என்ற சாதனையில் இணைந்துள்ளார். மேலும் சயீத் அஜ்மலுக்குப் பிறகு யு.ஏ.இ-யில். 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் ஆனார் யாசிர் ஷா.

டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓராண்டில் இரண்டு 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 7-வது பாகிஸ்தான் பவுலரானார் யாசிர் ஷா. இங்கிலாந்தில் 141 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் மே.இ.தீவுகளுக்கு எதிரான நேற்று முடிந்த அபுதாபி டெஸ்டில் 10/210 என்றும் இருமுறை இந்த ஆண்டு 10 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார் யாசிர் ஷா. ஆனால் அப்துல் காதிர் 1987-ம் ஆண்டு மூன்று முறை 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 10 விக்கெட்டுகளை சாய்க்கும் போது அதிக ரன்கள் கொடுத்ததில் 2-வது பாகிஸ்தான் பவுலர் என்ற நிலையில் உள்ளார் யாசிர் ஷா. இவர் 10 விக்கெட்டுகளுக்கு 210 ரன்களை விட்டுக் கொடுத்தார். அப்துல் காதிர் ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 218 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.Advertisement


பேஸ்புக்கில் எங்களது செய்திகளை முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, இதுவரை 24xnews.com தமிழ் பக்கத்தை லைக் செய்யாதவர்கள், கிழே உள்ள பொத்தானை அழுத்தி FB பக்கத்தை மறக்காமல் லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
Like

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

மனைவியை ஏமாற்றிய கணவனை வீட்டுக் கிளி ஒன்று காட்டிக் கொடுத்த சம்பவம்  வியப்பை ஏற்படுத்தியது.

தனது கணவனுக்கும் வீட்டு பணிப் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என மனைவிக்கு நீண்ட நாளாக சந்தேகம் இருந்துள்ளது.

ஆனாலும், அந்த சந்தேகத்தை மனைவியால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் அந்தப் பெண் வீட்டில் செல்லமாக வளர்த்த கிளி அவருக்கு உதவியிருக்கிறது.

அப்பெண்ணின் கணவரும், வீட்டுப் பணிப் பெண்ணும் பேசிக் கொண்ட சில அந்தரங்க வார்த்தைகளை கிளி அப்படியே பேசிக் காட்டியுள்ளது.

இதனால் தனது சந்தேகம்....

துபாயில் வீட்டில் புகுந்து 6 இலங்கையர்கள்  கொள்ளை!(2016-10-26) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


இதனால் தனது சந்தேகம் உறுதியான நிலையில் அப்பெண் ஒருநாள் வழக்கமாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் நேரத்திலிருந்து சற்று முன்னதாகவே வீட்டுக்குவர கணவர் மாட்டிக் கொண்டுள்ளார்.

உடனடியாக கணவர் மீது அப்பெண் ஹவாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் போலீஸாரோ, 'கிளியின் சாட்சி நம்பத்தகுந்ததாக நீதிமன்றத்தில் ஏற்கப்படாது.

இலங்கையில் ஏச்.ஐ.வி பரவ காரணம் வெளியானது…(2016-10-25) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஒருவேளை எதிர்தரப்பு வழக்கறிஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ அல்லது வானொலி நிகழ்ச்சியை கேட்டோ அந்த வார்த்தைகளை கிளி பேசியிருக்கிறது என வாதிட்டால் வழக்கு எடுபடாமல் போய்விடும்' எனக் கூறி வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

கிளியின் சாட்சி எடுபடாது என்பதால் கடுமையான தண்டனையில் இருந்து அந்த கணவர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பெண்கள் உட்பட்ட ஆசிய நட்டு பெண்களை 1500 ரியால்களுக்கு விற்பனை.(2016-10-26) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


பேஸ்புக்கில் சவூதி, கட்டார், இலங்கை, இந்தியா செய்திகளை முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, இதுவரை 24xnews.com தமிழ் பக்கத்தை லைக் செய்யாதவர்கள், கிழே உள்ள பொத்தானை அழுத்தி FB பக்கத்தை மறக்காமல் லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
Like

கிழக்கு – மத்திய வங்காளவிரிகுடாப் பகுதியில் உருவாகியிருந்த வலுவான தாழமுக்கமானது, தற்போது சூறாவளியாக வளர்ச்சியடைந்துள்ளது.

இது தற்போது மணிக்கு 11 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது.

இந்த சூறாவளிக்கு மியன்மார் நாட்டினால் பிரேரிக்கப்பட்ட கயன்ற் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சூறாவளியானது இலங்கையின்.......

Advertisement


இந்த சூறாவளியானது இலங்கையின் வடகிழக்காக 1400 கிலோமீற்றர் தூரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவின் போட் பலயர் இலிருந்து வடக்கு -வடமேற்காக 610 கிலோமீற்றர் தூரத்திலும் கோபால்பூரிலிருந்து தெற்கு –தென்கிழக்காக 660 கிலோமீற்றர் தூரத்திலும் விசாகப்பட்டணத்திலிருந்து கிழக்காக 780 கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

இது மேலும் வலுவடைந்து அடுத்த 74 மணித்தியாலத்திற்கு மேற்கு -தென்மேற்கு திசைநோக்கி நகர்ந்து வங்காளவிரிகுடாவின் மேற்கு – மத்திய பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை பெண்கள் உட்பட்ட ஆசிய நட்டு பெண்களை 1500 ரியால்களுக்கு விற்பனை.இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


பேஸ்புக்கில் எங்களது செய்திகளை முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, இதுவரை 24xnews.com தமிழ் பக்கத்தை லைக் செய்யாதவர்கள், கிழே உள்ள பொத்தானை அழுத்தி FB பக்கத்தை மறக்காமல் லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
Like

மீன்களில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பது தான் நெத்திலி மீன். இந்த மீன் சிறியதாக இருந்தாலும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்கு இந்த மீனை சமைத்த பின், அது மென்மையாகிவிடுவதால், இதனை முட்களோடு சாப்பிடுவதால் தான்.

பொதுவாக மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும். இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே விலை மலிவில் கிடைக்கும் இந்த மீனை சாதாரணமாக நினைத்துவிடாமல், வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வாருங்கள்.

இங்கு நெத்திலி மீனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து, இந்த மீனின் அற்புதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இது தெரிஞ்சா, இனிமேல் நீங்கள் இருமல் மருந்தே வாங்க மாட்டீங்க! இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


இதய ஆரோக்கியம்
நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

செல்லுலார் பழுதுபார்த்தல்
செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், பழுது பார்க்கவும் தேவையான புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.

சரும ஆரோக்கியம்
நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்களுடன், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.

வலிமையான பற்கள் மற்றும் எலும்புகள்
நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.


கண் ஆரோக்கியம்
நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

எடை குறைவு
நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.

ஆலிவ் ஆயிலில் அத்திப்பழத்தை 40 நாட்கள் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்!(2016-10-26) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


பேஸ்புக்கில் எங்களது செய்திகளை முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, இதுவரை 24xnews.com தமிழ் பக்கத்தை லைக் செய்யாதவர்கள், கிழே உள்ள பொத்தானை அழுத்தி FB பக்கத்தை மறக்காமல் லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
Like

பூனைக்குட்டியை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி இரும்பு குழாய் உடைந்ததால் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.

தமிழகம், ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி மாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான பகுதியில் உள்ள தோட்டத்தில் மணி(46), அவரது மனைவி அம்மச்சி ஆகியோர் கடந்த 2 வருடங்களாக தங்கி தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.

நேற்று மணி தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வந்த போது சேகர் அவரிடம் கிணற்றுக்குள் பூனைக்குட்டி விழுந்து விட்டது என்றும், அதை காப்பாற்றி எடுத்து வருமாறும் கூறினார்.

கிணற்றில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தது.

இதைத்தொடர்ந்து மணி பூனைக்குட்டியை காப்பாற்றுவதற்காக தண்ணீர் செல்லும் இரும்பு குழாயில் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார்.

அப்போது திடீரென இரும்பு குழாய் உடைந்தது.....

மது விற்பனைக்கு தடை: பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது.!(2016-10-24) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


அப்போது திடீரென இரும்பு குழாய் உடைந்தது. அதையொட்டி கயிறோடு மணி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் பின்னந்தலையில் பலத்த அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தொளசம்பட்டி பொலிசாருக்கும், ஓமலூர் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையொட்டி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி மணியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

மேலும் பூனைக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

பின்னர் மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தொளசம்பட்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து நில உரிமையாளர் சேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சற்றுமுன் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி: சவுதியில் தொழிலாளர்களின் நலன்களுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் ஜெத்தா, ரியாத், தம்மாம், மக்கா மற்றும் மதினா ஆகிய இடங்களில் அமைப்பு! முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


பேஸ்புக்கில் எங்களது செய்திகளை முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, இதுவரை 24xnews.com தமிழ் பக்கத்தை லைக் செய்யாதவர்கள், கிழே உள்ள பொத்தானை அழுத்தி FB பக்கத்தை மறக்காமல் லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
Likeஉணவுக் கால்வாயில் மாட்டிக் கொண்ட  பூட்டூசி சத்திர சிகிச்சை இன்றி அகற்றப் பட்ட சம்பவம் ஒன்று  சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.

வைத்தியசாலையின்  சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள்யு .எம்.சமீம்   வசதிகள் குறைந்த சம்மாந்துறை வைத்திய சாலையில் மற்றுமொரு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை மக்கள் பாராட்டியுள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

சம்மாந்துறையை சேர்ந்த  43 வயதுடைய பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக  வீட்டில் இரவு நேரத்தில்  பெனடோல்  மாத்திரை  சாப்பிடுவதற்கு  முற்பட்டு  மேசையில் இருந்த மாத்திரையை  விழுங்கி விட்டு  உறங்கி உள்ளார் .   இரண்டு நாட்களின் பின்னர்  குறித்த பெண்னுக்கு  வயிற்று உபாதை ஏற்பட்டு  சாப்பிட முடியாமல்  வாந்தி வரத்தொடங்கியுள்ளது.

அதன் பின்னர் குறித்த பெண் சம்மாந்துறை  அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு  சிகிச்சை பெற்ற  போது  இவரை  பரிசோதித்த சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள்யு .எம்.சமீம்  இவரது உணவுக்கால்வாயில் ஒரு திண்மப் பொருள் ஒட்டிக் கொண்டிருப்பதையும் இதன் காரணமாகவே  இவருக்கு வயிற்று உபாதை ஏற்படுவதையும் உறுதி படுத்தியதன்  பின்னர் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார் .

ஆனால் நோயாளிக்கு  உபாதை அதிகரிக்கும்....

பூனைக்குட்டியால் பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி(2016-10-26) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


ஆனால் நோயாளிக்கு  உபாதை அதிகரிக்கும் நிலையை அறிந்த  சத்திர சிகிச்சை நிபுணர்   நோயாளியை  தனது பூரண கட்டுப் பாட்டுக்குள் எடுத்து எக்ஸ் றே , மற்றும் ஸ்கேன்  செய்து பார்த்த போது  முஸ்லீம் பெண்கள் அணிகின்ற ஹிஜாப்  ஆடைக்கு  பாவிக்கின்ற  ஊசி உணவுக்கால்வாயில் சிக்கிக் கொண்டு இருப்பதையும் அவ்விடத்தில் கிருமி தோற்று உண்டாகி இருப்பதையும் உறுதிப் படுத்தினார் .

உணவுக்  குழாயில் வசமாக சிக்கிக் கொண்டிருந்த அந்த ஊசியை எடுப்பதாக  இருந்தால் பாரிய சத்திர சிகிச்சை செய்தே அகற்ற வேண்டும் . எனினும் சத்திர சிகிச்சை செய்யாமல் தான் சிங்கப்பூரில் பெற்ற  பயிற்சியையும்  மேலும் சில உபகரணங்களையும் பயன்படுத்தி மிகவும்  நுட்பமான முறையில் அந்த ஊசியை அகற்றியுள்ளனர் சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள்யு .எம்.சமீம்.

அந்த ஊசி  பெனடோல் மாத்திரை வடிவில்  இருந்தமையினால்  அவதானமில்லாமல் பாவிக்கப் பட்டுள்ளது,  இவ்வாறான விடயங்களில் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் . மாத்திரைகளை குறிப்பிட்ட இடங்களில் வைக்க வேண்டும் . நடந்துள்ள இந்த சம்பவமானது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையான  விடயம் என்பதுடன் அவதானாக் குறைவு  காரணமாக பாரிய சத்திர சிகிச்சை  செய்ய வேண்டிய சம்பவம் இறைவன் உதவியுடன்  இலகுவாக முடிவடைந்துள்ளது என்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில்  வைத்தியசாலையின்  சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள்யு .எம்.சமீம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக  பலர்  வைத்தியசாலை நிருவாகத்தையும் ,சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின்  சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள்யு .எம்.சமீம் அவர்களையும் பாராட்டியுள்ளனர்.Advertisement

(ஆர்.ராம் எம். எம் மின்­ஹாஜ்)

சீனி, பருப்பு, பால்மா உள்­ளிட்­ட74 அத்­தி­யா­வ­சியப் பொருட்­களுக்கும் சுகா­தார சேவை­க­ளுக்­கான வற் ­வ­ரி புதிய பெறு­மதி சேர் திருத்­த­ மூ­லத்­தில் விலக்­க­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக நிதி அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க சபையில் அறி­வித்­தார்.

அத்­துடன் புதிய திருத்த...

மது விற்பனைக்கு தடை: பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது.!(2016-10-24) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


அத்­துடன் புதிய திருத்த சட்­ட­மூ­லத்தில் மது­பானம், சிகரெட் மற்றும் தொலைத்­தொ­டர்பு ஆகி­யன வற்­வரி விதிப்­­புக்கு உள்­ள­ட­க்­கப்­பட்­டுள்­ளது. மேலும் புதிய திருத்த சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் வற்­ வரி மூல­மாக 180 கோடி ரூபா வரு­மானம் கிடைக்­கப்­பெ­றும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

பாரா­ளு­மன்­றத்தில் இன்று பெறு­மதி சேர் திருத்தச் சட்­ட­மூ­லத்தை சமர்­ப்பித்து உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

சற்றுமுன் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி: சவுதியில் தொழிலாளர்களின் நலன்களுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் ஜெத்தா, ரியாத், தம்மாம், மக்கா மற்றும் மதினா ஆகிய இடங்களில் அமைப்பு! முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

Advertisement


பேஸ்புக்கில் எங்களது செய்திகளை முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, இதுவரை 24xnews.com தமிழ் பக்கத்தை லைக் செய்யாதவர்கள், கிழே உள்ள பொத்தானை அழுத்தி FB பக்கத்தை மறக்காமல் லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
Like

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget